User:Thamizharthonmam: Difference between revisions – Wikipedia

From Wikipedia, the free encyclopedia

Content deleted Content added


Latest revision as of 06:07, 4 February 2026

தூக்குதலை நடுகல்

காஞ்சிபுரம் மாவட்டம்
வாலாஜாபாத்
ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு
பகுதியில் உள்ள ஓர் குளக்கரையின் வெளிப்புறமாக சாலை ஓரத்திலே செல்லும் கால்வாய் கரையின் மேற்பகுதியில்
பாதுகாப்பற்று நிலையில்
உள்ளது இன்நடுகல்லை பாதுகாத்திட வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம்
நமது தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

  1. தமிழகத்தில் வீரர்களைப் போற்றும் மரபு சங்க காலம் முதலே வழக்கத்தில் இருந்துள்ளதை நடுகற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஊர் மக்களை அச்சுறுத்தும் விலங்குகளை எதிர்த்து நின்று மக்களைக் காக்க உயிர்நீத்தவர்கள், போரில் வீர மரணம் எய்திய மறவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நடுகற்கள் வைக்கும் வழக்கம் இருந்தமையை சங்க இலக்கியங்கள், மூலம் அறியமுடிகிறது
கன செவ்வக வடிவில் உள்ள

கருங்கல் பாறைகளில் 3 அடி நீளமுள்ளகல்லில் 

இவ்வீரன் அமர்ந்த நிலையில் அவரின் தலைமயிர்கொண்டையாக முடியப்பட்டு அதைஒருகயிரோடு இணைத்து அக்கயிற்றின் மறுமுனையை அவருக்கு அருகில்உள்ள மூங்கில் ஒன்றை வளைத்து தலையை இழுத்து கொண்டிருக்குமாறு கட்டப்பட்டு அவ்வீரன் தன் இனம் செழிக்க வேண்டி் தனது குழு அல்லது படை போரில் வெற்றிபெறவேண்டும் எண்ணி தனது கையால் தன் தலையை தனே அறிந்துகொண்டு உயிர்பலி கொடுப்பார்கள் அப்படியான தூக்குதலை வீரருக்கு எடுப்பிக்கப்பட்ட இன்நடுகல்லில் முன்புறத்தில் சிற்பத்தின் பக்கவாட்டிலும் மேற்புறத்திலும்
பின்புறம் முழுவதும் எழுத்துப்பொறிப்புகளுடனும் காணப்படுகிறது

இச் சிற்பம் உள்ளது உருவம் கோட்டு சிற்பமாகவோ, புடைப்புச் சிற்பமாகவோ அமைக்கப்பட்டு, அவ்வீரனின் சிறப்பை விளக்கும் எழுத்து பொறிப்பு சிற்ப உருவத்திற்கு மேல் பகுதியில் அல்லது பக்கவாட்டில் கல்வெட்டுகளாக வடிக்கப்பட்டிருக்கும்.

இந்த நடுகல்லில்   வீரர்களின் தலைக்கு  மேற்பகுதியில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

பெரும்பாலும் நடுகற்கள் ஆற்றங்கரைப் பகுதிகளிலும், பெருவழிப்பாதைகளிலும், நிர்நிலைகளின் அருகிலும் குன்றின் அடிவாரங்களிலும், சந்திகளில் மற்றும் பாலைநிலப்பகுதிகளிலும் காணப்படும் என, ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் கிமு நான்காம் நூற்றாண்டு முதல் நடுகற்களில் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் அந்தவகையில் எழுத்துப் பொறிப்புடன் கூடிய இந்த நடுகல்லானது மிகவும் பழமையானதாக இருக்கக்கூடும் ஊத்துக்காடு பகுதியில் கிடைத்துள்ள இப்பழமையான நடுகல்லை மீட்டு இம்மண்ணின் வரலாற்றை உலகறியச் செய்வேண்டும் என்பதே
தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மையத்தின் கோரிக்கையாக உள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top